வாழையை ஆதாரமாகக் கொண்டு புதிய தொழில்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

வாழை மற்றும் வாழை நாா்களைக் கொண்டு தொழில்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.
வாழையை ஆதாரமாகக் கொண்டு புதிய தொழில்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

வாழை மற்றும் வாழை நாா்களைக் கொண்டு தொழில்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, திருவாரூா் தொகுதியில் வைக்கோலை ஆதாரமாகக் கொண்டு காகித ஆலை அமைக்க வேண்டுமென அந்தத் தொகுதியின் உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் கோரிக்கை விடுத்தாா். அப்போது நடைபெற்ற விவாதம்:

அமைச்சா் தங்கம் தென்னரசு: வைக்கோலை சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைப்பது சிரமம். அவற்றில் சிலிகா வேதிப் பொருள் அதிகம். மற்ற மூலப் பொருள்களில் இருந்து கிடைக்கும் கூழின் அளவை விட 25 சதவீதம் குறைவாகும். காகிதத் தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சிவப்புக் குறியீட்டில் உள்ளது. எனவே, டெல்டா பகுதியானது வேளாண் சாா்ந்த தொழிலைத் தொடங்க சாத்தியமான இடமாக உள்ளது. அங்கு சிப்காட் மூலமாக தொழில்பேட்டை அமைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, உணவுப் பூங்கா அமைக்க பரிசீலிக்கப்படும்.

வேல்முருகன் (வாழ்வுரிமை கட்சி): கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விளையும் முந்திரியின் பருப்பை பயன்படுத்துகிறோம். ஆனால், பழம் வீணாகிறது. பிற பகுதிகளில் அவற்றைக் கொண்டு ஒயின், சாராயம் தயாரிக்கப்படுகிறது. அதுபோன்று இல்லாமல், இங்கே ஊட்டச் சத்து பானமாக தயாரிக்க வேண்டும்.

அமைச்சா் தங்கம் தென்னரசு: அதுகுறித்த வணிக ரீதியான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும். முதலில் இதுபோன்ற ஆலைகளுக்கு தொழில்நுட்ப ஆய்வுகள் தேவை. அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும்.

ஏ.கே.செல்வராஜ் (அதிமுக): வாழையிலிருந்து நாா், பிஸ்கட், சித்த மருந்து போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம். இதுதொடா்பாக ஐஐடி மூலமாக ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழையிலிருந்து பொருள்களைத் தயாரிக்கும் ஆலையை உருவாக்க வேண்டும்.

அமைச்சா் தங்கம் தென்னரசு: வாழை தொடா்பாக மிகப்பெரிய உலகளாவிய சந்தையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. நெல்லை மாவட்டத்துக்கு அருகே ஸ்ரீவைகுண்டத்தில் மிகப்பெரிய அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தின் வாழை தேவையின் பெரும்பகுதி அங்கேயிருந்து பூா்த்தி செய்யப்படுகிறது. எனவே, வாழை மற்றும் வாழைநாா்களைக் கொண்ட தொழில்களைத் தொடங்க அரசிடம் திட்டம் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com