மருத்துவர்களின் ஊதியம்: மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு; மக்கள் நீதி மய்யம்

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ, அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க, தமிழக சட்டசபையில் நாளை நடக்கும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசாணை 354 ஐ செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிறது.

இந்த அரசு அமைந்ததில் இருந்து இன்று வரை, கரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக கையாண்டோம் என்று சொல்வதற்கு மிக முக்கிய பங்கு அரசு மருத்துவர்களையே சேரும். ஆனால் அவர்களின் நிலை வருத்தம்கொள்ள செய்கிறது.

மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்று மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. பல லட்சம் உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு இதை நிச்சயம் செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துள்ள இந்த அரசு, அவர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையையும் சேர்த்து நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com