'இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும்': எதைச் சொல்கிறார் முதல்வர்?

​தமிழ்நாட்டின் மனிதநேயம் இன்றைக்கு நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும்': எதைச் சொல்கிறார் முதல்வர்?


தமிழ்நாட்டின் மனிதநேயம் இன்றைக்கு நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற புனித ரமலான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றினார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது:

"இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல - உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பது என்ற அந்த வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து பலருக்கும் குறிப்பாக, ஏழை - எளியவர்களுக்கு உதவி செய்து, இந்த மாதத்தை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ரமலான் மாதத்தில் செய்யும் உதவிகள் மனித நேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம் இன்றைக்கு நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. இதுவும் ஒருவகை ‘திராவிட மாடல்‘தான். இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும் - ஆத்திரம் வரும் - கோபம் வரும்.

அதற்கெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ‘எல்லோருக்கும் எல்லாம் - அனைவருக்கும் உதவி சேர வேண்டும்‘ இதுதான் திமுகவினுடைய கொள்கை! இதுதான் திமுகவினுடைய லட்சியம்! அந்த அடிப்படையில்தான் நாங்கள் ‘திராவிட மாடல்... திராவிட மாடல்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்" என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com