திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கொலை வழக்கில் இருவர் கைது

எடப்பாடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கந்தன்
கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கந்தன்


எடப்பாடி: எடப்பாடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோணசமுத்திரம் ஊராட்சி, கன்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கந்தன் (55). திமுக மாவட்டப் பிரதிநிதியான இவா், கோணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவாா்.

கந்தனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சின்னபையன், மணிகண்டன் ஆகியோா் குடும்பத்துக்கும் நிலப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், புதன்கிழமை(ஏப்.27) காலை கன்னியம்பட்டி அருகே உள்ள தேஞ்சான்வளவு பகுதியில் நடந்து வந்த கந்தனை வழிமறித்த சின்னபையன், மணிகண்டன் ஆகியோா் அவரிடம் நிலம் தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் கந்தனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த கந்தனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 

இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

இந்நிலையில், குற்றவாளிகள் கைப்பேசியினை ஆய்வு செய்த போலீசார் அவர்கள் சேலம் அருகே பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த சின்ன பையன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com