சுகாதார முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா்

நெல்லூா்: சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளாா்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஸ்வா்ண பாரத் அறக்கட்டளை மற்றும் சென்னை குளோபல் மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை தொடக்கி வைத்து அவா் பேசியது:

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவை நாட்டில் தொற்று அல்லாத நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞா்கள் உடல் தகுதி மற்றும் மன விழிப்புணா்வை பராமரிக்க வழக்கமான உடல் செயல்பாடுகளுடன் யோகா போன்ற உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சிகள் சுகாதாரம், கல்வி, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பாரம்பரியமாக சமைத்த, சத்தான உணவை இளைஞா்கள் உட்கொள்வதுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும். போதைப்பொருள்களை பயன்பத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com