சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் இனி இல்லை

பேரவையில் இனி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுக்கப்படாது என்று அவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

சென்னை: பேரவையில் இனி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுக்கப்படாது என்று அவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட தேர்த் திருவிழா குறித்த பிரச்னை சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக புதன்கிழமை எடுக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அவர்களை அவைத் தலைவர் மு.அப்பாவு வெளியேற்றினார்.
இந்த நிலையில், இவ்வளவு பிரச்னைக்கும் காரணமாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தேவை தானா என்று அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். 
பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதன்கிழமை எழுப்பப்பட்ட பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் எழுப்பி காங்கிரஸ் உறுப்பினரின் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் க.பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களை அமைச்சர்கள் எப்படி விமர்சித்து பேசினர் என்பது குறித்து விரிவாகக் கூறினார்.
இதன்பின் பேசிய அவைத் தலைவர் மு.அப்பாவு, பேரவையில் இனி விதி எண் 55 மற்றும் 56-ன் கீழ் மட்டுமே பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்படும். 
அதாவது, உறுப்பினர்கள் அளிக்கும் ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது உரிய பதில்கள் வரப்பெற்றால் மட்டுமே விவாதத்துக்கு எடுப்போம். அதுவும் நாளொன்றுக்கு இரண்டு மட்டும் எடுக்கப்படும். 
சிறப்பு கவன ஈர்ப்பாக எடுக்க வேண்டாம் என அவை முன்னவர் தெரிவித்துள்ளார். அது பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com