மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூா், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, இரணியலில் தலா 30 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 20 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 10 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com