தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

30.04.22:  தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

01.05.2022:  கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

02.05.22, 03.05.22, 04.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

தக்கலை 4, பூதபாண்டி 3, இரணியல், சூரலக்கோடு, பேச்சிப்பாறை, காங்கேயம், பந்தலூர் தாலுகா அலுவலகம் தலா 2, சித்தார், புத்தன் அணை, பொள்ளாச்சி, உதகமண்டலம், பெருஞ்சாணி அணை, தேவாலா, குந்தா பாலம், திருச்செங்கோடு தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

30.04.22: லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com