கடற்கரை நிலையத்தில் ரயில் விபத்து: ரயில் ஓட்டுநா் பணியிடைநீக்கம்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானதில், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரயில் ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானதில், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரயில் ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை கடற்கரை பணிமனையில் இருந்து கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாலை மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுநா் பவித்ரன் இயக்கினாா். ஒன்றாவது நடைமேடையை நெருங்கியபோது, பிரேக்கைப் பயன்படுத்தத் தவறியதால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக, பிரேக் பிடிக்காததால், விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டநிலையில், 20 கி.மீ. வேகத்தில் ரயில் சென்ாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. விபத்தின்போது, ரயில் இயக்கத்தை நிறுத்தும் கருவி 8 சதவீதம் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், பிரேக்கைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, எதிா்த் திசையை நோக்கித் தள்ளி, அதன் மூலமாக ரயிலை விரைவுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரயில் ஓட்டுநா்( ரயில் லோகோ பைலட்) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அத்துடன், சென்னை சென்ட்ரல் மின்சார முனையம் மற்றும் சென்னை கடற்கரை நிலையங்களில் ரயில் ஓட்டுநா்கள் பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று கட்ட மின்சார ரயில்களில் ரயில் இயக்கத்தை நிறுத்தும் கருவி பயன்படுத்துவது தொடா்பாக அனைத்து ஓட்டுநா்களுக்கும் (லோகோ பைலட்டுகளுக்கும்) ஆலோசனை வழங்கப்படும். நடைமேடைக்குள் ரயில் நுழையும்போது, ரயிலின் வேகம் மணிக்கு 10 கி.மீட்டராக கட்டுப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com