கோப்புப் படம்
கோப்புப் படம்

அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம்

அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் இனி மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் இனி மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரியாணி திருவிழா, ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற இருந்தது.

இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாட்டிறைச்சி பிரியாணி வகைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. பின்னர் மழை காரணமாக இந்த பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: 

மக்களின் கேள்விகளை ஆணையம் கேள்வி கேட்டு அறிவிக்கை 12.05.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது. அறிவிக்கை மின்னஞ்சல் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டவுடன் மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவித்தார். அதுமட்டுமல்ல அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில "தி இந்து (13.05.2022) நாளேடுக்கு அளித்த பேட்டியில், "பிரியாணி திருவிழாவை ஒத்தி வைத்து விட்டதால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இத்தகைய பேட்டி ஆணையத்தை அவமதிப்பதாக அமைந்துள்ளது இதற்கென அவர் மீது தனி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாலும் ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை அவர் வகிப்பதால் மக்கள் மத்தியில் அவருடைய மதிப்பு குறைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் ஆணையம் அத்தகைய நடவடிக்கை எதையும் மேற்கொள்வதைத் தவிர்த்து விட்டது.

மேலும் ஆணையத்தின் அறிவிக்கைக்கு 07.06.2022 அன்று பதில் அறிக்கை அனுப்பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டிராத பன்றி இறைச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் பிரியாணி செய்வதற்காக பன்றி இறைச்சி எங்குமே பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், ஆம்பூரில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இத்தகையதொரு வாதத்தை ஆட்சியர் முன் வைத்திருந்தார் எனினும் அவர் எதிர்பார்த்த எந்த விளைவையும் அது ஏற்படுத்தவில்லை. எது எப்படி இருப்பினும் சர்ச்சைக்குரிய பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும். அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்பதையும் அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது. ஆணையத்தின் இவ்வுத்தரவு தலைமைச் செயலர் உள்துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com