கோவை செல்வராஜ் எந்த கட்சி என தெரியாது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் பிரதிநிதி எந்த கட்சி என தெரியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 
கோவை செல்வராஜ் எந்த கட்சி என தெரியாது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் பிரதிநிதி எந்த கட்சி என தெரியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. வருகிற 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக இபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமனும், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் முதல் ஆளாக வருகை தந்தார். இவரது இருக்கை முன்பு அதிமுக பெயர் பலகையை வைக்கப்பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த மற்ற கட்சியைச் சேர்ந்த நபர்கள் வருகை தந்தனர். 

சிறிது நேரத்தில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமனும் வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எது என தேடினர். அப்போது கோவை செல்வராஜ் அடுத்த இருக்கை தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை அறிந்தனர். அங்கு வந்து அமர்ந்த ஜெயகுமார், கோவை செல்வராஜ் முன்பு அதிமுக என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை தமது முன்பு எடுத்து வைத்துக்கொண்டார். ஜெயகுமார் செயலுக்கு கோவை செல்வராஜ் பெரிதாக சட்டை செய்யவில்லை. ஆனால், மற்ற கட்சியினர் சிரித்துக் கொண்டனர். 

கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இல்லாவிட்டால், வாக்களிக்க அனுமதிக்கக் கூடிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆதார் எண்ணை இணைக்க திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

அதிமுக சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமனும்தான் பங்கேற்றோம். ஓபிஎஸ் சார்பில் பங்கேற்ற கோவை செல்வராஜ் எந்த கட்சியின் சார்பில் வந்தார் என்பது எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். அதிமுக என்றால் நாங்கள்தான், அதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க  என ஜெயகுமார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com