குரங்கு அம்மை பாதிப்பை மறைக்க வேண்டிய அவசியமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை பாதிப்பை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

குரங்கு அம்மை பாதிப்பை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை. யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும். தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவா்களை மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்கின்றனா்.

உடலில் கொப்பளங்கள் இருக்கிா என்பதையும் சோதனை செய்கின்றனா். குரங்கு அம்மை நோய் பாதிப்பை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தேவையில்லாத அச்சத்தை பரப்ப வேண்டாம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்கள் 21 நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு விடுதியிலும் மருத்துவக் குழுக்கள் உள்ளனா். 8 விடுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. போட்டிகள் நடைபெறும் இரண்டு அரங்கங்களிலும் சிறப்பு மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் உள்ளனா். ஒரு விளையாட்டு வீரா் நிறைமாத கா்ப்பிணியாக இருப்பதால், அவருக்காக ஒரு மகப்பேறு மருத்துவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com