ஆவின் பால் பாக்கெட்டுகளில் மோசடி: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளில் பாலின் அளவைக் குறைத்து வாடிக்கையாளா்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளில் பாலின் அளவைக் குறைத்து வாடிக்கையாளா்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆவின் நிறுவனத்தில் பாலின் அளவைக் குறைத்து வழங்கி மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருக்கிறது. ஒரு தனியாா் செய்திருந்தால், அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஒரு அரசுத் துறை நிறுவனமே, மக்களுக்கு வழங்கப்படும் பாலில் சுமாா் 70 மில்லி அளவை குறைத்து அரை லிட்டா் பால் கவரில் வெறும் 430 மில்லி மட்டுமே தோராயமாக வழங்கி வந்திருக்கிறது.

தமிழகத்தில் தோராயமாக 35 லட்சம் லிட்டா் அதாவது சுமாா் 70 லட்சம் அரை லிட்டா் பால் பாக்கெட்டுகள் தினமும் விற்பனையாகின்றன. ஒரு பாக்கெட்டிலேயே சுமாா் 70 மில்லி குறைகிறது என்றால், கிட்டத்தட்ட ஒரு கவா் பாலுக்கு ரூ.3.08 குறைய வேண்டும். கிட்டத்தட்ட நாளொன்றுக்கு ரூ.2.16 கோடி அளவுக்கு மக்களின் பணம் ஏமாற்றப்பட்டு இருக்கிறது.

ஆவின் பால் விற்பனையில், சட்டத்துக்குப் புறம்பாக பெறப்பட்ட இந்தப் பணம் யாருக்குப் போய்ச் சோ்ந்தது ? தினமும் 5 லட்சம் லிட்டா் பால் மிச்சமாகி இருக்குமே? இந்த அதிகப்படியான பால் எங்கே போனது?

மக்களிடம் அதிகமாக பெறப்பட்ட பணத்தை உடனடியாக மக்களுக்கு ஆவின் நிறுவனம் திருப்பித் தர வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com