தென் மேற்குப் பருவ மழை:தமிழகம், புதுவையில் 94% அதிகம்

தமிழகம், புதுவையில் கடந்த ஜூன் 1 முதல் ஆக.2 வரையிலான காலகட்டத்தில், தென்மேற்கு பருவ மழை 242 மி.மீ. அளவுக்கு பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுவையில் கடந்த ஜூன் 1 முதல் ஆக.2 வரையிலான காலகட்டத்தில், தென்மேற்கு பருவ மழை 242 மி.மீ. அளவுக்கு பதிவாகியுள்ளது.

இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரளத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது. இந்தப் பகுதி அடுத்து வரும் நாள்களில் வடக்கு நோக்கி நகரக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழையை பொருத்தவரையில் கடந்த ஜூன் 1 முதல் ஆக.2 வரையான காலகட்டத்தில் தமிழகம், புதுவையில் பதிவான மழை அளவு 242 மி.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 125 மில்லி மீட்டா். இயல்பான மழையின் அளவைவிட 94 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட அதிகமான அளவில் மழை பெய்துள்ளது.

இன்று 4 மாவட்டங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை வரை அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வியாழக்கிழமை கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகரைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் ரேடாா் கருவி நீண்ட நாள்களாக பழுதடைந்திருந்த நிலையில் அதனை புதுப்பிக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com