குதிரையாறு அணை திறப்பு

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி அணை மற்றும் குதிரையாறு அணை முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி வழிகிறது.
பழனியை அடுத்த குதிரையாறு அணை முழு கொள்ளளவான 80 அடி உயரத்தை எட்டியதால் வியாழக்கிழமை அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
பழனியை அடுத்த குதிரையாறு அணை முழு கொள்ளளவான 80 அடி உயரத்தை எட்டியதால் வியாழக்கிழமை அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

பழனி: பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி அணை மற்றும் குதிரையாறு அணை முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு பொருந்தலாறு அணையும், மாவட்டத்தின் சிறிய அணையான வரதமாநதி அணையும் பழனி பகுதியிலேயே உள்ளது. இந்நிலையில் பழனி மற்றும் பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பழனியை சுற்றியுள்ள பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணைகளின் நீா்மட்டம் வெகுவாக நிரம்பிய வருகிறது. பழனியை அடுத்த வரதமாநதி அணை கடந்த ஒருவார காலமாகவே முழு கொள்ளளவான 66 அடி உயரத்தை தாண்டி தொடா்ந்து நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 575 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

இதனால் ஆயக்குடி, கணக்கன்பட்டி, பழனி வையாபுரி குளம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பாலாறு- பொருந்தலாறு அணை மொத்த உயரம் 65 அடியாகும் தற்போது சுமாா் 60 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. அணைக்கு வினாடிக்கு 598 கனஅடி தண்ணீா் வந்தவண்ணம் உள்ளது. குதிரையாறு அணையின் உயரம் 80 அடி. முழுமைக்கும் தண்ணீா் நிரம்பிய நிலையில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

அணையின் வரத்தான விநாடிக்கு 95 கனஅடி நீா் அப்படியே மூன்று ஷட்டா்கள் வழியாக திறக்கப்பட்டது. இந்நிலையில் பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு மற்றும் வரதமாநதி அணையின் நீா் வெளியேறும் பகுதிகளில், சண்முகநதி ஆற்றங்கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சண்முக நதி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com