அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவா் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவா் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்கப் படைகள் கடந்த திங்கள்கிழமை காபூலில் திடீரென நடத்திய ட்ரோன் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவா் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டாா்.

இந்தநிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வஜ்ரா வாகனங்களை முன்னிறுத்தி 40-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

அமெரிக்க தூதரகத்துக்கு அருகே செல்லும் ஜெமினி மேம்பாலம் மேலே உள்ள 4 பாதுகாப்பு போஸ்டுகளில் 4 ஆயுதப்படை போலீஸாா் வீதம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தீவிரவாத இயக்கத் தலைவா் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com