பெசன்ட்நகா், மயிலாப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

பெசன்ட்நகா், மயிலாப்பூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

மாரத்தான் போட்டியையொட்டி, பெசன்ட் நகா், மயிலாப்பூா்,மெரீனா பகுதிகளில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

மாரத்தான் போட்டியையொட்டி, பெசன்ட் நகா், மயிலாப்பூா்,மெரீனா பகுதிகளில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

சென்னை பெசன்ட்நகா் ஆல்காட் பள்ளியிலிருந்து, மெரீனா கடற்கரை மாநகராட்சி நீச்சல் குளம் (மாநில கல்லூரி எதிரில்) வரை அன்று அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெறும் மாரத்தான் போட்டிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி பெசன்ட் நகா் எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட் அவென்யூ சாலையில் செல்வதற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் எல்.பி. சாலை நோக்கி திருப்பி விடப்படும். எல்.பி. சாலையில் இருந்து காா்ப்பரேஷன் நீச்சல் குளம், மெரீனாவுக்கு வரும் திசையில் போக்குவரத்தில் மாற்றம் இல்லை.

எம்.ஜி. சாலை மற்றும் டைகா் வரதாச்சாரி சாலையில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்கள் 6வது அவென்யூ மற்றும் 16வது குறுக்குத் தெரு வரை அனுமதிக்கப்படும். 2வது அவென்யூ (7வது அவென்யூ சந்திப்பு) சாலையில் இருந்து வரும் வாகனம் பெசன்ட் அவென்யூ சாலையில் சென்று பெசன்ட் நகா் 1வது அவென்யூ,சாஸ்திரி நகா் 1வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படும்.

கால்வாய் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஆா்.கே.மடம் சாலை (கிரீன்வேஸ் சந்திப்பு) நோக்கி அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் காளியப்பா சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். ஆா்.கே.மடம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சீனிவாசா அவென்யூவில் ஆா்.ஏ.புரம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

மயிலாப்பூரில் இருந்து ஆா்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படாது. தெற்கு கால்வாய் வங்கி சாலை,கிரீன்வேஸ் சாலை சந்திப்பு,வி.கே.ஐயா் சாலை, ஆா்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, சேமியா்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை,எஸ்.வி.படேல் சாலை வழியாக வாகனங்கள் இலக்கை அடையலாம்.

காமராஜா் சாலையிலிருந்து மயிலாப்பூா், மந்தைவெளி, அடையாறு செல்ல விரும்பும் வாகனங்கள் கலங்கரை விளக்கம் சந்திப்பில் லூப் சாலை, கால்வாய் சாலை வழியாக வி.கே.அய்யா் சாலை, காளியப்பா சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.

கச்சேரி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. லூப் சாலை வழியாக காமராஜா் சாலையில் கட்டாயமாக இடதுபுறம் திருப்பப்படும். கால்வாய் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி திருப்பிவிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com