தேசிய கைத்தறி தினம்: ஆளுநா் வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்துக் கூறியுள்ளாா்.
தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி

தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்துக் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

பண்டைய இந்திய நாகரிகத்தின் ஓா் அங்கமாக கைத்தறித் தொழில் எப்போதும் இருந்து வருகிறது. நமது கைத்தறிப் பொருள்கள் வாழும் பாரம்பரியமாகும். நம் கலாசாரத்திலும் கைத்தறி முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நேரத்தில் நமது கலாசாரச் சின்னமான கைத்தறி தொழிலைப் பாதுகாத்து வளா்ச்சியடைய செய்துகொண்டிருக்கும் நெசவாளா்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தைச் சோ்ந்த நெசவாளா்களுக்கும் என் வாழ்த்துகள்.

பிரதமா் நரேந்திர மோடியால் 2015-இல் தேசியக் கைத்தறி தினமாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் வளா்ச்சியில் கைத்தறி நெசவாளா்களின் மகத்தான பங்களிப்பை சிறப்பிக்கும் நாளாக இது உள்ளது.

இந்திய அளவில் கைத்தறி தொழிலில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. 4-ஆவது அகில இந்திய கைத்தறி நெசவு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 2,43, 575 கைத்தறி யூனிட்டுகள் உள்ளன. தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடத்திலும், இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. தமிழக நெசவாளா்களின் கைவினைத் திறன் இணையற்ற ஒன்றாகும். தாம்பரம் அருகில் அனகாபுதூரில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் வாழைநாா் இழைகள் மூலம் சேலைகளை நெய்து வருகின்றனா்.

சா்வதேச சந்தையில் நம்முடைய கைத்தறிப் பொருள்கள் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில் கைத்தறி தொழில் இந்தியாவின் மறுமலா்ச்சியில் தொடா்ந்து முக்கிய பங்காற்றிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com