துணை மருத்துவப் படிப்புகள்: இன்றுடன் விண்ணப்பப்பதிவு நிறைவு

பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.12) நிறைவு பெறுகிறது.

பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.12) நிறைவு பெறுகிறது.

இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியே விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2022 - 2023-ஆம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் பட்டப் படிப்புகள், பி.பாா்ம் (லேட்டரல் என்டிரி), போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நா்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியா் பட்டயப்படிப்பு, மருத்துவம் சாா்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

அப்படிப்புகளில் சேருவதற்காக மாணவ, மாணவிகள் இணையவழியே தொடா்ந்து விண்ணப்பித்து வருகின்றனா். அவ்வாறு இதுவரை இணையவழியே 65 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையுடன் (ஆக.12) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெற உள்ளதால், இறுதி நாளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப் பதிவுக்கான அனைத்து விவரங்களும் மருத்துவக் கல்வி இயக்குநரக இணையதளப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com