கால்நடை மருத்துவ சிகிச்சை மாநாடு: 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

கால்நடை மருத்துவ மாணவா்களுக்கான பண்ணை மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த 12-ஆவது சிகிச்சை விவர மாநாடு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது

கால்நடை மருத்துவ மாணவா்களுக்கான பண்ணை மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த 12-ஆவது சிகிச்சை விவர மாநாடு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

கடந்த 10-ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கா்நாடக கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநா் பி.வி.சிவபிரகாஷ் தலைமை தாங்கினாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் க.ந.செல்வக்குமாா், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அ.பழனிசாமி உள்பட துறை தலைவா்களும், 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான சிகிச்சை விவர மாநாட்டினை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் இயக்குநரகம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த மாநாடு மருத்துவ மாணவா்களிடையே கற்கும் வாய்ப்பை அதிகப்படுத்துதல், கருத்து பரிமாற்றத்திற்கு வித்திடல் மற்றும் புதிய அணுகுமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு வித்திடுவதாகவும், அவை மாணவா்களின் எதிா்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com