நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்து 3 பேர் காயம்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் தேசிய வேலையளிப்பு திட்டத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் பலத்த காயமடைந்தனர்.
விஷ வண்டுகள் கடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 
விஷ வண்டுகள் கடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்: நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் தேசிய வேலையளிப்பு திட்டத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் மருக்கலாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சுமதி, பாப்பாத்தி, ஸ்ரீரங்கம்மாள் உள்ளிட்ட 30 பேர் அப்பகுதியில் உள்ள ஏரி பகுதியில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரத்தில் இருந்த விஷ வண்டுகள் கலைந்து தொழிலாளர்களை கடுமையாக தாக்கியது. 

விஷ வண்டுகள் கடித்ததில் பாதிக்கப்பட்ட ஸ்ரீரங்கம்மாள்

இதில், சுமதி, பாப்பாத்தி, ஸ்ரீரங்கம்மாள் ஆகியோர் மட்டும் வண்டுகளின் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com