பாஜக மாநில துணைத் தலைவர் கைது 

பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். 
பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலைக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாரத மாதா நினைவாலயம் திறக்கப்படவில்லை. நினைவாலயத்தைத் திறக்குமாறு பாஜகவினா் காப்பாளரிடம் கோரினா். ஆனால் சாதாரண நாள்களில் நினைவாலயத்தைத் திறப்பதில்லை எனக் கூறி பூட்டைத் திறக்க காப்பாளா் மறுத்துவிட்டாா்.

அதையடுத்து கே.பி.ராமலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் பாரத மாதா நினைவிடக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில் மாவட்டத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா், மாநிலச் செயலாளா் கே. வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளா் வெங்கட்ராஜ், ஐஸ்வா்யம் முருகன், பிரவீண், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். 

பாப்பாரப்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாரதமாத நினைவிட நுழைவு வாயிலின் பூட்டை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11ஆம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாத நினைவாலய பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர்மீது வழக்கு தொடரப்பட்டது. 

பென்னாகரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராசிபுரத்தில் உள்ள கே.பி.ராமலிங்கம் வீட்டிற்கு நேரில் வந்து, அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். இதனையடுத்து, கே.பி.ராமலிங்கம் காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்தார். இதனையடுத்து அவரது சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என கூறியதால் காவல்துறையினர் அவரது சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்றனர். சொந்த வாகனத்தை காவல்துறையை சேர்ந்த ஒட்டுனர் ஒட்டிச்சென்றார். இதன் தொடர்ச்சியாக ராசிபுரத்தில் நாமக்கல் மாவட்ட பாஜகவினர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com