சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றலுக்கான  மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9000-லிருந்து ரூ.10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சென்னை ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் 2-வது முறையாக தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார்.

மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%-ல் இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு  அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது  முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.