சுதந்திர நாள்: திருச்சி மேயர் தேசியக் கொடியேற்றினார்

திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர். இரா. வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையே ரூ.15,000, ரூ.10,000 , ரூ.5,000 ரொக்கம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு ரூ. 15,000 ரொக்கமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மேயர் வழங்கினார்.  

மேலும், மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கெளரவித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com