சக்கர நாற்காலியில் வந்து தேசியக் கொடி ஏற்றிய ஊராட்சி மன்றத் தலைவர்!

திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக முல்லை வேந்தன் என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மணி கிராமஊராட்சி மன்றத் தலைவர் முல்லை வேந்தன் தன்னுடைய உடல் நிலையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் வந்து தேசியக்கொடி ஏற்றினார்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மணி கிராமஊராட்சி மன்றத் தலைவர் முல்லை வேந்தன் தன்னுடைய உடல் நிலையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் வந்து தேசியக்கொடி ஏற்றினார்.

பூம்புகார்: திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக முல்லை வேந்தன் என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது. இன்று சக்கர நாற்காலியில் வந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இந்த சம்பவம் அங்கே கூடியிருந்த மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் பள்ளி மாணவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் கிராம சபை கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com