கனல் கண்ணன் கைது: திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 500 பேர் கைது

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி அமைப்பினர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி அமைப்பினர்.

திருப்பூர்: கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டைத் கண்டித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது நெருக்கடி நிலையில் இருந்ததைவிட மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்துக்களின் மீது கைது நடவடிக்கைகளும், பொய் வழக்குப் பதிவு செய்வதுமாக உள்ளது. காவல்துறையில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடராஜர் சிலையை கேவலப்படுத்தியவர்களும், இந்துக்களை அழிப்பதாகக் சொல்லிய இஸ்ஸாமிய பெண், இஸ்ஸாமியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கிறிஸ்தவ மதபோதகர் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் கனல் கண்ணன் வழிபாட்டுத்தலத்தின் முன்னாள், கடவுளுக்கு எதிராக உள்ள வாசகத்தை எடுக்கவேண்டும் என்று சொன்னதில் எந்தவிதமான தவறும் இல்லை. இதை இந்து முன்னணி முழுமையாக ஆதரிக்கிறது. அவரை பயங்கரவாதியைப் போல தேடிப்பிடித்து காவல்துறை கைது செய்துள்ளது. 

இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களையும், இந்துக்களுக்கு ஆதரவாக பேசுபவர்களையும் கைது செய்வது அரசின் வேலையாக உள்ளது. இதை இந்த அரசும், காவல் துறையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆட்சி மாறினாலும் காவல் துறையில் உள்ளவர்கள் ஓய்வு பெறும் வரையில் பணியாற்றித்தான் ஆக வேண்டும். இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் குறித்து பட்டியல் எடுத்துவைத்துள்ளோம். இதற்கு அந்த அதிகாரிகள் பதில் செல்ல வேண்டும். அதே வேளையில் கனல் கண்ணனை விடுதலை செய்யாவிட்டால் ஆன்மிக பெரியவர்களையும், மடாதிபதிகளையும் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். 
இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி அமைப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com