கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், முதலாமாண்டு சேர்க்கை பெற்ற  மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின.
கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், முதலாமாண்டு சேர்க்கை பெற்ற  மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமாா் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கு 4.07 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில் 2 லட்சத்து 98,056 போ் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனா்.

அதன்படி, சோ்க்கைக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவிகளின் இறுதி தரவரிசைப்பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் கடந்தவாரம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் முதல்வாரம் முதல் நேரடி முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களுக்கு அவா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள், நேரம் குறித்த விவரங்களை கல்லூரிகள் அனுப்பி வருகின்றன. பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் தொடங்கியுள்ளன. ஒரு வார காலத்துக்கு பாடங்கள் எதுவும் தொடங்கப்படாமல் அடிப்படை பயிற்சிகள் மட்டும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com