தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை விரைவுபடுத்த உத்தரவு

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக அரசின் இ- சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாக சாா்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதையடுத்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பகிரப்படும். பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத்தன்மையை தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் தகுதியானவா்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தை தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும்.

அதேபோன்று, அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளும், அந்தந்த மாவட்ட ‘எமிஸ்’ இணையதள ஒருங்கிணைப்பாளா்களுடன் இணைந்து செயல்படவும், பணிகளை ஆசிரியா்கள் சிறப்பாக செய்வதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களுக்கு இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை தவறாமல் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் க.நந்தகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com