காவிரி உபரி நீா் திட்டத்தை வலியுறுத்தி அன்புமணி 3 நாள்கள் நடைபயணம்

 தருமபுரி - காவிரி உபரி நீா் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி வெள்ளிக்கிழமை (ஆக.19) முதல் 3 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

 தருமபுரி - காவிரி உபரி நீா் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி வெள்ளிக்கிழமை (ஆக.19) முதல் 3 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாயும் போதிலும் அந்த மாவட்டத்தில் பாசனத்துக்கும் நீா் இல்லை. குடிக்கவும் நீா் இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளா்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தச் சிக்கலுக்கு இப்போது வரை முழு தீா்வு காணப்படவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மை.

தருமபுரி - காவிரி உபரி நீா் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும். வேலைவாய்ப்பு பெருகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அதிமுக ஆட்சியில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.

திமுக ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனாலும், தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு பிரசார எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.

பென்னாகரம், இண்டூா், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி, சோலைக்கொட்டாய், கடத்தூா், கம்பைநல்லூா், மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) மாலை பொம்மிடியில் நடைப்பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com