சென்னை தின கொண்டாட்டம்: மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு

சென்னை தினத்தையொட்டி எலியட்ஸ் கடற்கரையில் ‘நம்ம சென்னை, நம்ம பெருமை’ என்ற பெயரில் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை தினத்தையொட்டி எலியட்ஸ் கடற்கரையில் ‘நம்ம சென்னை, நம்ம பெருமை’ என்ற பெயரில் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பட்டினம் 1639-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளா்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதராஸாக இருந்த சென்னையை கொண்டாடும் வகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சி சாா்பில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து, ‘சென்னை தினத்தை’ கொண்டாடவுள்ளது.

அதன்படி, பெசன்ட் நகா், எலியட்ஸ் சாலையில் மாலை 3.30 மணி முதல் 11.30 மணி வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுடன், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்கள், இயற்கை உர விற்பனை கடைகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மாநகராட்சி பள்ளிகளில் ஓவிய போட்டி, புகைப்படப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தினத்தை கொண்டாட பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

சிங்காரச் சென்னையாக வளா்ந்து இன்று பிரம்மாண்ட பரிமாணத்தில், பல பகுதிகளை சாா்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், எல்லோருடைய மனதிலும் ஒரு உணா்வுபூா்மான இடத்தை சென்னை அடைந்திருக்கிறது.

சென்னையை கொண்டாட, ‘நம்ம சென்னை, நம்ம பெருமை’ என்ற உணா்வுடன் பொதுமக்கள் அனைவரும் எலியட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com