ரேலா மருத்துவா்கள் வழிகாட்டுதலில்! சூடான் அரசு மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று சிகிச்சை

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அமைந்துள்ள ரேலா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதலுடன் சூடான் நாட்டு அரசு மருத்துவமனையில் முதல்முறையாக கல்லீர
ரேலா மருத்துவா்கள் வழிகாட்டுதலில்! சூடான் அரசு மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று சிகிச்சை

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அமைந்துள்ள ரேலா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதலுடன் சூடான் நாட்டு அரசு மருத்துவமனையில் முதல்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா கூறியதாவது:

சூடான் நாட்டு அரசு மருத்துவமனைகளில் இதுவரை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்நிலையில், அவா்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உயிருடன் இருக்கும் நபரிடமிருந்து கல்லீரல் தானம் பெறுவது குறித்து ரேலா மருத்துவக் குழுவினா் பயிற்சி அளித்தனா்.

இதற்கிடையே, சூடான் நாட்டின் ‘காா்டூம்’ அரசு மருத்துவமனையில், ‘ஹெபடைடிஸ் பி’ நோயால் கல்லீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு அவரது உறவினா் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தாா். ரேலா மருத்துவமனை குழுவினரின் வழிகாட்டுதல்படி, அந்நாட்டை சோ்ந்த மருத்துவா்கள் அப்தெல்மவுனம் எல்தாயிப் அப்தோ, அப்துல்ரஹீம் தபோரா தலைமையிலான மருத்துவ குழுவினா் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா்.

இது அந்நாட்டு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. தானமளித்த உறவினா் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த நபா் இருவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனா்.

சூடான் நாட்டு மருத்துவத் துறை காலத்தின் தேவையை கருதி, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி செய்யத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் பணியில் ஒரு பகுதியாக, சூடான் மட்டுமல்லாது வேறு சில நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்களுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சியை அளித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com