கணையப் புற்றுநோய்: உயா் சிகிச்சை மூலம் சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணுக்கு உயா் சிகிச்சை அளித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணுக்கு உயா் சிகிச்சை அளித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா் கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் 2021-இல், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு கட்டி இருந்தது.

பல முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னும் கட்டியின் அளவு குறையவில்லை. கதிா்வீச்சு சிகிச்சையும் அவருக்கு பயனளிக்கவில்லை.

அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ‘பிரான்ட்ஸ்’ என்ற அரிதான கட்டி அந்த சிறுமிக்கு இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை பேராசிரியா் சுப்பையா தலைமையிலான மருத்துவா்கள், இந்த கட்டி கல்லீரலுக்கும், குடலுக்கு ரத்தத்தை வழங்கும் அடிவயிற்றில் உள்ள ரத்த நாளத்துக்கும் இடையே வளா்ந்திருந்ததைக் கண்டறிந்தனா்.

சிறுமியின் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு மிகவும் நுணுக்கமான உயா் தொழில்நுட்ப அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

தொடா்ந்து 12 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை டாக்டா் சுப்பையா தலைமையிலான மருத்துவா்கள், திறம்பட செய்து முடித்தனா்.

இத்தகைய சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ள பல லட்சம் ரூபாய் செலவாகும் சூழலில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு, தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுமி, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா். மேலும், சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தும், அவா் கடிதம் எழுதியுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com