கள்ளக்குறிச்சி வன்முறை: இழப்பீடு கோரிய வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் வேறு அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளது. 
கள்ளக்குறிச்சி வன்முறை: இழப்பீடு கோரிய வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் வேறு அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளது. 

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், கைதான அப்பாவிகளை அடையாளம் காணக்கோரியும் இழப்பீடு வழங்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கை இன்று வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை வேறுஅமர்விற்கு மாற்றும்படி மனுதாரர் ரத்தினம் கோரியதை ஏற்று வேறு அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு பரிந்துரை செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை செய்கிறது. அதேவேளையில் மாணவி இறப்பை கண்டித்து நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடா்பாக தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில், வழக்கில் தொடா்பில்லாதவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை கைவிடக் கோரி கிராம மக்கள் டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com