பழனி திருமஞ்சன கட்டணத்தில் யாருக்கு உரிமை? மதுரைக் கிளை தீர்ப்பு

ழனி மலை முருகன் கோயிலில், திருமஞ்சன கட்டணத்தைப் பெறுவதற்கு பண்டாரத்தினரே உரிமை பெற்றவர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
பழனி திருமஞ்சன கட்டணத்தில் யாருக்கு உரிமை?
பழனி திருமஞ்சன கட்டணத்தில் யாருக்கு உரிமை?


மதுரை: பழனி மலை முருகன் கோயிலில், திருமஞ்சன கட்டணத்தைப் பெறுவதற்கு பண்டாரத்தினரே உரிமை பெற்றவர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

பழனி முருகன் திருக்கோயில் குருக்கள் சார்பில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அந்த மனுவை தள்ளுபடி செய்து மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது, பழனி முருகன் கோயில் திருமஞ்சன கட்டணத்தைப் பெற பண்டாரத்தினரே தகுதியானவர்கள்.
ஆரம்ப காலம் முதல் பண்டாரங்களே திருமஞ்சன நீரை தொன்று தொட்டு எடுத்து வருகின்றனர் என்பது கோயில் ஆவணம் மூலம் தெரிய வருகிறது.

கோயில் திருமஞ்சன நீரை எடுத்து வருவதிலும், கட்டணத்திலும் குருக்களுக்கு உரிமை வழங்கபடவில்லை என்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com