குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஆக்டோபர் 30-ல் நடக்கும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர். 92 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா், ஏழு ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தோ்வு அக். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வரும் 27-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணியிலிருந்து 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையிலும் விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com