காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்துவது சிரமம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

மலைப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளில் மதுபானங்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்பட்சத்தில், ரூ.10-த்தை திரும்ப வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம், டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்தத் திட்டம், 10 மலைப் பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமாா், பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 88 லட்சம் மது பாட்டில்களில் அதாவது 52 லட்சம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

மலைப் பகுதிகளில் குறைவான மதுக் கடைகள் இருப்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது. மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது சிரமம்’ என அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் தெரிவித்தாா்.

பின்னா், நாளொன்றுக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்பனையாகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, மாதம் 51 கோடி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பதிலளித்தாா். இந்த 51 கோடி மதுபாட்டில்களை திரும்பப் பெறாவிட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சிந்திக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா். மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அரசு அறிக்கை

அளிக்கும்படி, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com