
சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் காப்பீடு வழங்கக் கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களை காப்பீடு செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019-ல் திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கோரி வழக்கு தொடரபட்டது. ரூ.1.5 கோடி இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகான விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளின் நிறுவனம் ரூ.64.33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க: 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள்: இதுதான் சட்டம்-ஒழுங்கா? இபிஎஸ்
இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் காப்பீடு வழங்கக் கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.