கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ததற்கான காரணத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கேள்வி  எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி தாளாளா் உள்ளிட்ட 5 போ் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மரணமடைந்தாா். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளா் ரவிகுமாா், செயலாளா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸாா், சிறையில் அடைத்துள்ளனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் 5 பேரும் ஜாமீன் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனா்.

ஜாமீன் கோரிய தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம்,  கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com