பரந்தூர் விமான நிலையம் குறித்த சந்தேகம்: அமைச்சர் விளக்கம்

பரந்தூர் விமான நிலையம் திட்டம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:

சென்னைக்கு அருகே மற்றொரு விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது. விமான நிலையம் அமைக்க கடைசியாக 4 இடங்களை தேர்வு செய்தோம். கடைசியாக தேர்வு செய்த இடங்களில் பன்னூர், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

பன்னூருடன் ஒப்பிடும் போது பரந்தூரில் குடியிருப்புகள் குறைவாக இருப்பதால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. பன்னூரில் அதிக குடியிருப்புகள் இருந்ததால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது.

சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகமாக நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு இழப்பீடும், மாற்று நிலமும் ஏற்பாடு செய்யப்படும். வேறு இடத்தில் நிலம் வழங்கி வீடு கட்டவும் நிதியுதவி செய்யப்படும்.  நிலம் தரும் மக்களை ஒரே இடத்தில் குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக விமான நிலையம் கொண்டு வரவில்லை. விவசாயிகளை வஞ்சிக்க வேண்டும் என்ற நோக்கமும் இல்லை. பரந்தூரில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களில் தகுதி அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலை தரப்படும். 


13 கிராமங்களில் உள்ள 1,005 வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிலம் தருவோம். அந்த நிலத்தில் வீடு கட்ட நிதியுதவி தரப்படும். 2446.79 ஏக்கர் நன்செய் நிலம், 799.59 ஏக்கர் புன்செய் நிலம், 1317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் எடுக்கப்பட உள்ளது என்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com