நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: முதல்வர் ஸ்டாலின்
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: முதல்வர் ஸ்டாலின்

நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: முதல்வர் ஸ்டாலின்

நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.


ஈரோடு: நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நெல் உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 18 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக அதாவது 1.22 கோடி மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக எனக்கு புகழ் எதுவும் தேவையில்லை. இருக்கும் புகழே போதும். என் உயிர் இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன். திராவிட மாடல் இலக்கணப்படி இன்று ஆட்சி நடைபெற்று வருகிறது. 

மக்களை காக்கக்கூடிய அரசசாக மட்டும் இல்லாமல் மண்ணைக் காக்கக் கூடிய அரசாகவும் உள்ளது என்று கூறினார்.

நெல் சாகுபடி அதிகம் என்பது தமிழகத்தின் வளத்தைக் காட்டுகிறது. இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்திற்கு செய்து தரப்பட்டுள்ளது.
பெருந்துறை அரசு மருத்துவமனையில் 761 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டு கோரிக்கையான, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கி இருக்கிறது.
அந்தியூர், பர்கூர் ஊராட்சி மலைப்பகுதி கிராமங்களில் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.
அம்மாப்பேட்டை, வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் இணைப்புச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அதிமுக ஆட்சியில், கிடப்பில் போடப்பட்ட 1600 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.
பெருந்துறை பகுதிக்கு, 765 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் கிடந்தது. அதனையும் நாம் செயல்படுத்த இருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த பிரமாண்டமான அரசு விழா இப்போது நடைபெற்று வருகிறது.

1,761 புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 184 கோடி ரூபாய். 
135 முடிவுற்ற பணிகளைத் நான் இந்த விழாவில் துவக்கி வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 262 கோடி ரூபாய்.
63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு, 167 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் இந்த விழாவில் வழங்கப்பட இருக்கிறது. - ஆக, மூன்றும் இணைந்த, முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரம் - பர்கூர் ஊராட்சியிலுள்ள, மடம், கல்வாரை, பெஜலட்டி, எப்பத்தாம்பாளையம் மற்றும் தேவர்மலை பகுதியிலுள்ள மலைவாழ்மக்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நபார்டு - கனிமம் மற்றும் சுரங்கங்கள் திட்டங்களின்கீழ் தொலைதூரக் கல்வி மற்றும் தொலைதூர மருத்துவ சேவையினை இணையதளம் வழியாக வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக்குழு மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழிற்குழு உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக “ஆற்றல் ஈரோடு“ என்ற பிரத்தியேகச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை இணையதளத்தின் செயல்பாடு இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com