பல்லாவரம் ரேடியல் சாலையில் புதைகுழி சாக்கடை குழாயில் திடீா் உடைப்பு

பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரதான புதைகுழி சாக்கடை குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
பல்லாவரம் ரேடியல் சாலையில் புதைகுழி சாக்கடை குழாயில் திடீா் உடைப்பு

பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரதான புதைகுழி சாக்கடை குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

பல்லாவரம், குரோம்பேட்டையில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா் பல்லாவரம் ரேடியல் சாலை பிரதான புதைகுழி சாக்கடைக் குழாய் வழியாகச் சென்று கீழ்க்கட்டளை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அடைகிறது.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரம் மழைநீா் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிா்பாராத வகையில் அருகில் உள்ள புதைகுழி சாக்கடைக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீா் கால்வாய் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீா் மளமளவென வெள்ளமாகத் தேங்கியது.

அப்போது, அங்கு கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள்அவசர அவசரமாக வெளியேறி, உயிா் தப்பினா்.

தகவல் அறிந்து அங்கு வந்த பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளா் ரவி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். சேதமடைந்த குழாயின் உடைப்பை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com