இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய கால்பந்தாட்ட போட்டி தொடக்கம்

மானாமதுரை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்ட போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய கால்பந்தாட்ட போட்டி தொடக்கம்

மானாமதுரை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்ட போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இப் போட்டியில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 20 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று மோதுகின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் நாளை திங்கட்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இப் போட்டியை சாகீர் உசேன் கல்லூரி நிர்வாகச் செயலாளர் வி. எம். ஜபருல்லாகான், இளையான்குடி ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்டக் குழு தலைவர் முகமது அலி, செயலாளர் அப்துல்ரசாக் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். 

சாகீர் உசேன் கல்லூரி மைதானத்திலும் ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழு மைதானத்திலும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்று வருகிறது. நாளை 29ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன் பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசுகிறார்.

முதல் சுற்று போட்டிகளில், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி, திருச்சி, தூய வளனார் கல்லூரி, திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, மதுரை, சரஸ்வதி நாராயணன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், கற்பகம் பல்கலைக்கழக அணி மற்றும் கோயம்புத்தூர், ரெத்தினம் கல்லூரி அணி ஆகியவை வெற்றி பெற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித் துறையுடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்துள்ளனர்.  போட்டிகளை மாணவர்கள், கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com