
சென்னை உயர்நீதி மன்றம்
திருச்செந்தூர் முருகன் கோயிலின் சொத்துகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்பின் தன்மையை கண்டறியுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G