காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி: ஒருவரை தேடும் பணி தீவிரம்!

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி: ஒருவரை தேடும் பணி தீவிரம்!

நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல  வனப்பகுதியில் அமைந்துள்ள சீகூர் ஆணிக்கால் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய சென்ற 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.

இந்நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய  200 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரை சீகூர் ஆற்றில் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

2 மணி நேர தேடுதல் பணிக்கு பின் மூன்று பேரின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கபட்டுள்ளது. மேலும்  காட்டாற்று வெள்ளத்தில் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com