10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்!

தமிழகத்தில் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்!

தமிழகத்தில் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் மெய்யநாதனின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதாக சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்கள் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமிக்கும், பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், மதிவேந்தனுக்கு வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளது. மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜகண்ணப்பணுக்கு கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com