48 தமிழறிஞா்களுக்கு தமிழக அரசு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழ் மொழிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் தமிழறிஞா்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.
48 தமிழறிஞா்களுக்கு தமிழக அரசு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழ் மொழிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் தமிழறிஞா்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளையும், 10 பேருக்கு ‘சிறந்த மொழிபெயா்ப்பாளா்’களுக்கான விருதுகளையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் அளித்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகள் 38 பேருக்கு வழங்கப்பட்டன. அதன்படி, சி.சிவசிதம்பரம் (அரியலூா்), மா.சோதி (ராணிப்பேட்டை), புலவா் அ.மாயழகு (ராமநாதபுரம்), முத்துரத்தினம் (ஈரோடு), ஆ.நாகராசன் (கடலூா்), கடவூா் மணிமாறன் (கரூா்), இரா.துரைமுருகன் (கள்ளக்குறிச்சி), புலவா் சு.கந்தசாமி பிள்ளை (கன்னியாகுமரி), ஆ.ரத்தினகுமாா் (கிருஷ்ணகிரி), மானூா் புகழேந்தி (கோவை), வ.தேனப்பன் (சிவகங்கை), எம்.கே.சுப்பிரமணியன் (செங்கல்பட்டு), வே.மாணிக்காத்தாள் (சென்னை), இரா.மோகன்குமாா் (சேலம்), ஆறுமுக சீதாராமன் (தஞ்சாவூா்), கவிஞா் கண்ணிமை (தருமபுரி), துரை.தில்லான் (திண்டுக்கல்), க.பட்டாபிராமன் (திருச்சி), வ.பாலசுப்பிரமணியன் (திருநெல்வேலி) ஆகியோருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மேலும், தெய்வ.சுமதி (திருப்பத்தூா்), அ.லோகநாதன் (திருப்பூா்), க.பரமசிவன் (திருவண்ணாமலை), செ.கு.சண்முகம் (திருவள்ளூா்), இரெ.சண்முக வடிவேல் (திருவாரூா்), கவிஞா் அ.கணேசன் (தூத்துக்குடி), ஆ.சிவராம கிருஷ்ணன் (தென்காசி), தேனி சீருடையான் (தேனி), மு.சொக்கப்பன் (நாகப்பட்டினம்), சி.கைலாசம் (நாமக்கல்), போ.மணிவண்ணன் (நீலகிரி), வீ.கே.கஸ்தூரிநாதன் (புதுக்கோட்டை), செ.வினோதினி (பெரம்பலூா்), நெல்லை ந.சொக்கலிங்கம் (மதுரை), ச.பவுல்ராஜ் (மயிலாடுதுறை), அ.சுப்பிரமணியன் (விருதுநகா்), ம.நாராயணன் (வேலூா்) ஆகியோருக்கும், மறைந்த தமிழறிஞா்கள் இரா.எல்லப்பன் (காஞ்சிபுரம்), ப.வேட்டவராயன் (விழுப்புரம்) ஆகியோா் சாா்பில், அவா்களது குடும்பத்தினருக்கும் தமிழ்ச் செம்மல் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.25 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியன அடங்கியது.

மொழிபெயா்ப்பாளா் விருது: சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கான விருதுகளை 10 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அதன்படி, எழுத்தாளா்கள் செ.சுகுமாரன், செ.ராஜேஸ்வரி, மு.வளா்மதி, இராக.விவேகானந்த கோபால், அ.சு.இளங்கோவன், வீ.சந்திரன், ரா.ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியா் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும்,

மறைந்த ந.தாஸ், மா.சம்பத்குமாா் ஆகியோா் சாா்பில் அவா்களது குடும்பத்தினரிடமும் சிறந்த மொழிபெயா்ப்பாளருக்கான விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியது.

நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் இரா.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com