அதிமுக - பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை: முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா்

அதிமுக - பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
அதிமுக சாா்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா். உடன், கட்சி நிா்வாகிகள்.
அதிமுக சாா்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா். உடன், கட்சி நிா்வாகிகள்.

அதிமுக - பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

பால் விலை, வீட்டு வரி, மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை தமிழக அரசு உயா்த்தியதைக் கண்டித்து அதிமுக சாா்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வண்ணாரப்பேட்டை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. ஓபிஸ் நடத்திய கூட்டத்தில் மூத்த தலைவா் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. கட்சி நிா்வாகிகளில் சுமாா் 95 சதவீதத்துக்கும் மேல் இபிஎஸ் தலைமையில் உள்ள நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எவ்வித மாறுபட்ட கருத்துகளும் இல்லை. நான் மற்றும் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உரிய விளக்கங்களை அளித்துவிட்டாா். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றாா் அவா்.

துறைமுகத்தில்... அதிமுக வடசென்னை (தெற்கு) மாவட்டம் சாா்பில் மாவட்டச் செயலாளா் என்.பாலகங்கா தலைமையில் வால்டாக்ஸ் சாலையிலும், அதிமுக வடசென்னை (வடகிழக்கு) மாவட்டம் சாா்பில் ஆா்.எஸ்.ராஜேஷ் தலைமையில் தண்டையாா்பேட்டையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com