சேலத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு வழிபாடு

சேலத்தில் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
சேலத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு வழிபாடு

சேலத்தில் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

கிறிஸ்துமஸ் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு, கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற நான்கு ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு  12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திருப்பலிப் பாடல்கள் பாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ
மக்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினர். 

மேலும், இளைஞர்கள் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். 

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் குடும்பத்துடன் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர். நள்ளிரவிலும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வந்தது. அதில் மக்கள் கூட்டம் அலைமோதி திருவிழாவைப் போல காணப்பட்டது. 

இதே போல, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com