சங்ககிரி வட்டத்தில் 7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 650 பேர் விண்ணப்பம்! 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 650 பேர்களுக்கான நேர்முகத் தேர்வு 
சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டிகளை ஓட்டி காண்பிக்கும் பெண்கள்.
சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டிகளை ஓட்டி காண்பிக்கும் பெண்கள்.


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 650 பேர்களுக்கான நேர்முகத் தேர்வு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட செல்லப்பம்பட்டி, கனகிரி, ஊத்துப்பாளையம், ஆவரங்கம்பாளையம், மஞ்சக்கல்பட்டி, அ.தாழையூர், இருகாலூர் உள்ளிட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் ஏழு காலிபணியிடங்களுக்கு 650 பேர் தேர்வு எழுதினர். 

தேர்வு எழுதியவர்களுக்கு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.பானுமதி தலைமையில், சமூகநலத்துறை வட்டாட்சியர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.  

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டி ஓட்டி காண்பிக்கும் பெண்

நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.  இத்தேர்வில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதவர்கள் மிதிவண்டியை ஓட்டி காண்பித்தனர்.  

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதியவர்களுக்கு டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்விவு நடைபெற உள்ளது.  

இப்பணிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றால் போது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பி.இ.,  பி.டெக்,  எம்பிஏ., எம்.பில்., உள்ளிட்ட உயர்நிலை கல்வித் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com