
கோப்புப்படம்
குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு உரிய பயிற்சி பெற வரும் 27-இல் நுழைவுத் தோ்வு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை அரசு குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. அந்த மையத்தின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்கு கட்டணம் இல்லாத பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தோ்வு கடந்த 23-இல் நடைபெற இருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்தத் தோ்வு தள்ளி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பயிற்சி நிலையங்களை செவ்வாய்க்கிழமை (பிப். 1) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நுழைவுத் தோ்வானது வரும் 27-ஆம் தேதியன்று நடைபெறும். நுழைவுத் தோ்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த ஆா்வலா்கள் வரும் 21-ஆம் தேதி முதல் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொலைபேசி எண்: 044-2462 1475.